Prague Masters : 3-வது வெற்றியை பெற்றார் பிரக்ஞானந்தா ..!

Prague Masters : பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு (Czechia) நாட்டில் தற்போது நடந்து வருகிறது. இதில் 10 வீரர்கள் பங்கேற்று ரவுண்ட் ராபின் முறையில் லீக் போட்டிகளில் மோதிக்கொள்வார்கள். இதன் 6-வது சுற்று போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டு விளையாடினார்.

Read More :- IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.!

இந்திய கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் கிராண்ட்மாஸ்டரான நோடிர்பெக் அப்துசத்தரோவை தோற்கடித்து தனது அடுத்த இடத்திற்கு முன்னேறியுள்ளார். பிரக்ஞானந்தா விளையாடிய இந்த போட்டியில் எதிரத்து விளையாடிய  நோடிர்பெக்-கு வெற்றிக்கான  சிறிய வாய்ப்பு கூட கொடுக்காமல் ஆட்டத்தை சிறப்பாக விளையாடினார். மேலும் பிரக்ஞானந்தா இந்த ஆட்டத்தில் அனைத்து நகர்விலும்  சிறப்பாக இருந்தார்.

Read More :- INDvsENG : நாளை தொடங்குகிறது 5-வது டெஸ்ட் போட்டி ..! தீவிர பயிற்சியில் இந்திய அணி ..!

நடந்த இந்த போட்டியில், கருப்பு நிற காயை வைத்து விளையாடிய பிரக்ஞானந்தா போட்டியின் 56-வது நகர்வில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் 3-வது வெற்றியை பிரக்ஞானந்தா பதிவு செய்துள்ளார். இதற்கு முன் விளையாடிய இரண்டு ஆட்டங்களில் இந்தியாவின் க்ராண்ட்மாஸ்டர்களான டி. குகேஷ் மற்றும் விதித் குஜராத்தியை வீழ்த்தி உள்ளார்.

நடந்து முடிந்த இந்த 6-வது சுற்றின் முடிவில் நோடிர்பெக் அப்துசத்தரோவ் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளார்.   ஹங்கேரியை சேர்ந்த ரிச்சர்ட் ராப்போர்ட், ஈரானை சேர்ந்த பர்ஹாம் மக்சூட்லூவும் மற்றும் இந்தியாவை சேர்ந்த பிரக்ஞானந்தாவும் தலா 3½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment