• தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.
  • பொள்ளாச்சி ஆபாச வீடியோ கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் சிபிசிஐடி அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும்  நபர்கள் கொண்ட கும்பல்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.

மேலும் இந்த வழக்கு விசாரணையை தமிழக டிஜிபி ராஜேந்திரன் இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

Related image

இந்நிலையில் சிபிசிஐடி தற்போது புதிய  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், பொள்ளாச்சி ஆபாச வீடியோ கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் சிபிசிஐடி அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் படங்கள் வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம்.தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக காக்கப்படும்.