பி.எம்.கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை – ராகுல் காந்தி

பி.எம்.கேர்ஸ் (PMCARES) நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி செலுத்துவதற்காக பிரதமரின் நிவாரண நிதி திட்டம் என்று அறிவிக்கப்பட்டது.இதில் பல தரப்பினரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.ஆனால் பிரதமரின் நிதி வெளிப்படை தன்மை இல்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,      பி.எம்.கேர்ஸ் (PMCARES) நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை. இந்தியர்கள் வாழ்க்கை  பெரும் ஆபத்துக்குள்ளாகியுள்ளது. பொது மக்கள் பணத்தைப் பயன்படுத்தி தரம்குறைந்த பொருட்கள் வாங்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.