அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

பிப்ரவரி 13, 14 தேதிகளில் இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கவுள்ளார். இந்த பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணம் செய்வது இது ஏழாவது முறையாகும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 14ஆம் தேதி அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கும் மோடி, இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றவும் உள்ளார். இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் இது தொடர்பில் மேலும் வெளியிட்டுள்ள தகவலில், “ துபாயில் நடைபெறவுள்ள உலக அரசு உச்சி மாநாடு 2024ல் பிரதமர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உச்சி மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவார்.

மக்களவை தேர்தலுக்குள் சிஏஏ சட்டம் நடைமுறை – அமித்ஷா திட்டவட்டம்!

அபுதாபியில் உள்ள முதல் இந்து கோவிலான BAPS மந்திரை திறந்து வைத்து, சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி, இந்தியா-அமீரகம் இடையிலான கலாசாரங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment