சச்சின், கங்குலி உள்ளிட்ட 40 விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 

இதனைத்தொடர்ந்து இன்று காலை நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தியை மோடி வெளியிட்டுள்ளார். அதில், அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி என பிரதமர் மோடி கூறினார். வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் என்று பிரதமர் மோடி புகழ்த்துள்ளார். மேலும் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டில் விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச் அல்லது அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.

இதையடுத்து கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் சச்சின், கங்குலி, யுவராஜ், பி.வி.சிந்து, ராணி ராம்பால் உள்ளிட்ட 40 விளையாட்டு வீரர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர். இதனிடையே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2301-ஆக அதிகரித்துள்ளது என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 157 பேர் குணமடைந்து வீட்டிற்க்கு திரும்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்