குஜராத்தில் ரூ.13,500 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.45 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றார். அங்கு கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன் விழா கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இதையடுத்து மெஹ்சானா நகரில் சாலையில் ரோடு ஷோ நடத்திய மோடி சாலையில் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்களை நோக்கி கையசைத்தார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, தொடர்ந்து வாலிநாத் மகாதேவ் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த மோடி மெஹ்சானா நகரில் உள்கட்டமைப்பு, நகர்ப்புற மேம்பாடு, ஜவுளித்துறை உள்ளிட்ட ரூ.13,500 கோடிக்கும் அதிகமான மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

விவசாயிகள் போராட்டம்..கணக்குகளை முடக்குவதில் உடன்பாடு இல்லை- எக்ஸ் நிறுவனம்..!

அவர் பேசும் போது, “எப்போதும் மெஹ்சானாவில் இருப்பது சிறப்பு. இங்கிருந்து தொடங்கப்படும் திட்டங்கள் இப்பகுதியின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிக்கும். நமது கோவில்கள் கடவுள் இருக்கும் இடம் மட்டுமல்ல, அது நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சின்னங்களும் கூட. நமது கோவில்கள் அறிவு மையங்களாகவும் விளங்குகின்றன. ஒரு பக்கம் வழிபாட்டு தளங்கள் கட்டப்பட்டு வருகின்றன, மறுபுறம், நாட்டில் ஏழைகளுக்கான வீடுகளும் கட்டப்படுகின்றன” என்றார்.

Leave a Comment