அடடா! இந்த பட்ஜெட்டில் இந்த ‘Moto G04’ போன் செம வொர்த்! முழு விவரம் இதோ!

நம்மில் பலருக்கும் குறைந்த பட்ஜெட்டில் நல்ல போன் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவது உண்டு. இதற்காகவே பலரும் குறைந்த பட்ஜெட்டில் என்ன போன் வாங்கலாம் என்று யோசிப்பது உண்டு. அவர்களுக்காகவே மோட்டோ நிறுவனம் அசத்தலான போன் ஒன்றை கொண்டு வந்து இருக்கிறது. அது என்ன போன் என்றால் ‘Moto G04’  தான். போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரத்தை விவரமாக பார்க்கலாம்.

மோட்டோ g04 சிறப்பு அம்சங்கள் 

  • மோட்டோ g04 போன் ஆனது பவர் 6.56-இன்ச் HD+ 90Hz LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.612 × 720 பிக்சல்கள் பிக்சல் உடன் வருவதால் படம் பார்க்கும் போது சுமாரான அனுபவத்தை கொடுக்கும். இதே அம்சத்தில் வெளிவந்த மற்ற போன்களின்  HD டிஸ்ப்ளேவுடன்  ஒப்பிடும்போது மோட்டோ g04   HD திரை நன்றாக இருக்கிறது.
  • இந்த போனில் (fingerprint lock) கைரேகை ஸ்கேனரை வால்யூம் ராக்கர்களுடன் வலது பக்கத்தில் உள்ளது. 1TB வரையிலான மெமரி கார்டுகளை ஏற்றுக்கொள்ளும் இடமும் இரட்டை சிம் போட்டுக்கொள்ளும் ஸ்லாட் இடது பக்கத்தில் உள்ளது.

சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்.! சிறப்பம்சங்கள் இதோ…

  • கான்கார்ட் பிளாக், சாடின் புளூ மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களிலும் இந்த போன் வருகிறது.
  • மேலும், இந்த போன் அபெர்ச்சர் கொண்ட 16MP பின்பக்க கேமரா மற்றும் LED ப்ளாஷ் அதைப்போல, 5MP முன் கேமராவை கொண்டு இருக்கிறது. புகைப்படங்கள் வீடியோக்கள் எடுக்கும்போது பெரிய அளவில் தரமாக இல்லை என்றாலும் கூட பார்க்கும் அளவிற்கு நன்றாகவே இருக்கும்.
  • மேலும், இந்த போன் 5000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருந்தாலும் 7.99மிமீ தடிமன் மற்றும் 178.8 கிராம் எடையை இந்த போன் கொண்டுள்ளது.
  • 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளதால் கண்டிப்பாக ஜார்ஜ் நன்றாகவே நிற்கும். அதைப்போல இதில் 10 வார்ட்ஸ் பாஸ்ட் ஜார்ஜிங் சப்போர்ட்டும் வருகிறது.

விலை எவ்வளவு தெரியுமா? 

இந்த மோட்டோ ஜி04  ஆனது ஆரம்ப விலையில் ரூ. 6,999, உடன் வருகிறது.  மோட்டோ ஜி04 விலை ரூ. 4 ஜிபி + 64 ஜிபி க்கு 6,999 எனவும் 5 ஜிபி + 128 ஜிபி பதிப்பின் விலை ரூ. 7,999 விலையுடன் வருகிறது. இது Flipkart, motorola.in ஆகியவற்றில் கிடைக்கும்.  இன்று (பிப்ரவரி 22) முதல் மதியம் 12 மணி முதல் எல்லா கடைகளிலும் கிடைக்கும். குறைவான பட்ஜெட்டில் போன் வாங்க விரும்புபவர்கள் இதனை கண்டிப்பாக வாங்கிக்கொள்ளலாம்.

Leave a Comment