ஊரடங்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னென்ன.? மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை.!

நாளை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் முதற்கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 14 முதல் மே 4ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 

நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்ததால் அதனை தொடர்ந்து 3ஆம் கட்டமாக மே 4ஆம் தேதி முதல் மே 17 வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டது. 

மே 17ஆம் தேதி ஊரடங்கு நிறைவடையும் நிலையில் நாளை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு மே 17ஆம் தேதி நிறைவடையும் நிலையில் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.