இந்திய பிரதமருடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் திடீர் சந்திப்பு.. இருதரப்பு குறித்த முக்கிய ஆலோசனை..

  •  நேற்று அதாவது  ஜனவரி14ம் தேதி நாட்டின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச அரசியல் குறித்த ரெய்சினா மாநாடு டில்லியில்  துவங்கியது.
  • இதற்கிடையே ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்திய பிரதமருடன் திடீர் சந்திப்பு.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 7 நாடுகளின் முன்னாள் பிரதமர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் இந்தியா வந்தனர். இந்த மாநாட்டில்  உலகளாவிய சவால்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை செய்தனர். இதை தொடர்ந்து, 100 நாடுகளில் இருந்து 700 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதில், ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஈரான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ்  ஜனவரி 15ம் நாளான இன்று இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிடுள்ளார், அதில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த உரையாடல் எங்களின் நீண்டகால நட்பை பிரதிபலித்தது. இவ்வாறு அந்த பதிவில்  கூறியிருந்தார்.

author avatar
Kaliraj