படமாக உருவெடுத்துள்ள நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல்!

  • நானும் சிங்கிள் தான் பட இயக்குனரின் கருத்து. 
  • நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் படமாகிறது. 

நானும் சிங்கிள் தான் என்ற படத்தை, திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே ‘நானும் சிங்கிள் தான்’ என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம் என்றும், டைட்டிலுக்கு ஏற்றாற்போல், கண்டன்ட்டிலும் தனி கவனம் செலுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவனின் காதல் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.