6-வது நாளாக விலை மாறாமல் நீடிக்கும் பெட்ரோல் – டீசல் விலை ! இன்றைய நிலவரம் இதோ ..!

Petrol Diesel Price :  இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

Read More :- தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை! தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

பெட்ரோல், டீசல் விலை கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி அன்று மத்திய அரசால் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 குறைக்கப்பட்டதால் சென்னையில் ரூ.110.85 காசுகள் இருந்த பெட்ரோல் விலை 102.63-க்கும், ரூ.102.59 காசுகள் இருந்த டீசல் விலை 94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் – 13 ம் தேதி நள்ளிரவில் இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் 102.63 பைசாவிற்கு விற்கப்பட்ட பெட்ரோல், 100.75 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read More :- வாகனப் பேரணி..! கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

இதன் மூலம் சென்னை உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைநகராமான டெல்லியில் லிட்டருக்கு ரூ.94.72 ஆகவும் அதே சமயம் டீசல் லிட்டருக்கு ரூ.87.62 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment