பெட்ரோல்- டீசல் விலை உயர்வு..!இன்று முதல் அமல்…!

சென்னையில்,இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.71-க்கும்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.88.62-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி,தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த நிலையில்,தற்போது அவற்றின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
நேற்றைய தினம் சென்னையில்,ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.54-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.88.34-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில்,இன்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து 94.71 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 88.62 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை நிர்ணயமானது இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.