பழனி மலைக்கோயிலுக்கு செல்ல இன்று மதியம் வரை அனுமதி…!

பழனி மலைக்கோயிலுக்கு செல்ல இன்று மதியம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த செப்.26 ஆம் தேதி பழனி மலைக்கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா துவங்கியது. இன்று  உச்சிகால பூஜை மதியம் 12:00 மணிக்கும், சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணிக்கும் நடக்கிறது.

மேலும், காலை 11:00 மணிக்கு கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். மதியம் 2:45 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட்டு மலைக்கோவில் சன்னதி திருக்காப்பிடப்படும். பீச் ரோடு, படிப் பாதை வழியாக மதியம் 12:00 மணிக்கு மேல் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவில்  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment