இன்று முதல் மத வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி – டெல்லி அரசு!

இன்று முதல் டெல்லியிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளும் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் டெல்லியிலும் இரண்டாம் அலையின் பொழுது கொரோனா மிக தீவிரமாக பரவி வந்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது.

தற்போது டெல்லியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதன் காரணமாகவும் பண்டிகை காலங்கள் நெருங்குவதன் காரணமாகவும் மத வழிபாட்டுத் தலங்களை திறக்க டெல்லி அரசு அனுமதித்துள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளும் புதிதாக விதிக்கப்பட்டது.

அதன்படி பக்தர்கள் மத வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்கப்பட்டாலும், ஒரே நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், பேரணிகள் மற்றும் ஊர்வலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal