‘மேகதாதுவுக்கு அனுமதி’ – மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த கர்நாடக முதல்வர்…!

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். 

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக உறுதியாக உள்ளது. அதேபோல மேகதாதுவில் அணை கட்டவிடாமல் எப்படியும் தடுப்போம் என தமிழக அரசும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த கர்நாடக முதல்வர்

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.