மக்கள் நீதி மய்யம் இதை வரவேற்கிறது – மநீம

இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது என மநீம ட்வீட். 

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

இதுகுறித்து மநீம தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அலுவல் மொழி தொடர்பாக, மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சரிவரத் தமிழ் பேசவும், எழுதவும், வாசிக்கவும் தெரியாத ஓர் இளைய சமுதாயம் தமிழகத்தில் உருவாகியிருப்பதும் கவலையளிக்கிறது. இந்த நடைமுறை யதார்த்தத்தினை மனதில்கொண்டு, தமிழ் மொழியை அன்றாடப் பயன்பாட்டுக்கு முழுஅளவில் கொண்டுவரவும், அதன் வளர்ச்சிக்குத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment