பயப்பட தேவையில்லை.. ஆனாலும் எச்சரிக்கையாக இருங்கள்.! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்.!

மக்கள் பயப்பட தேவையில்லை. ஆனாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். – மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா.

கொரோனாவின் தாக்கம் தற்போது அண்டை நாடான சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால்,  இந்தியாவில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் , மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கொரோனாவில் புதிய பரிமாணம் பற்றியும் ஆலோசனை நடத்தினர்.

அந்த ஆலோசனை முடிந்த பிறகு , மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ‘ மக்கள் பயப்பட தேவையில்லை. ஆனாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.’  என குறிப்பிட்டார்.

மேலும், மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிப்பதன் மூலம், புதிய கொரோனா மாறுபாடுகள், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டுகொண்டு அதனை பின்பற்றலாம் என  மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment