மக்களே தடுப்பூசி போடுங்க…தமிழகத்தில் இன்று 50,000 இடங்களில் 12 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள்!

தமிழகம் முழுவதும் இன்று 50,000 இடங்களில் 12 வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அரசு சார்பில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் வாரந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகின்றன.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று 50,000 இடங்களில் 12- வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி,சிறப்பு முகாம்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன.எனவே,அரசு தடுப்பூசி மையம்,ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட  பகுதிகளுக்கு சென்று முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களும்,அவ்வாறு செலுத்தி கால அவகாசம் முடிந்தவர்களும் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.