வெடிக்குமா..?நடிகர் தனுஷின் பட்டாஸ்..! ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தின் அப்பேட் வெளியாகியுள்ளது
  • நடிகர் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை காலை வெளியிடப்படும் என்று படக்குழு  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் பட்டாஸ் இந்த படத்தினை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் என்கின்ற இரட்டையர்கள் இசையமைத்து உள்ளனர்.படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்றை பெற்றுள்ள நிலையில் பட்டாஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து  அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு அறிவித்துள்ளது.அந்த அறிவிப்பில் படத்தின் ட்ரெய்லர் நாளை காலை 10.31 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.பட்டாஸ் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு நடிகர் தனுஷின் ரசிகர்கள் மற்றமகிழ்ச்சியிலும் ட்ரெய்லரை எதிர்நோக்கியவாறு உள்ளனர்.