குப்பைக்கு சென்ற சீட்டுக்கு மதிப்பு ஒரு கோடியே ஐந்து இலட்சம்.. காய்கறி வியாபாரிக்கு அடித்த யோகம்..

குப்பைக்கு சென்ற சீட்டுக்கு மதிப்பு ஒரு கோடியே ஐந்து இலட்சம்.. காய்கறி வியாபாரிக்கு அடித்த யோகம்..

  • மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா நகரத்தை  சேர்ந்தவர்  சாதிக். இவர் அப்பகுதியில்   காய்கறி விற்பனை செய்து வருகிறார்.
  •   இவருக்கு விதமாக மிகப்பெரிய  அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 

இவர், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி  5 நாகலாந்து லாட்டரி டிக்கெட்களை அவர் வாங்கியுள்ளார். பின் அவர்,  கடந்த 2ம் தேதி  அந்த  லாட்டரி டிக்கெட் கடைக்குச் சென்று, தனது லாட்டரி டிக்கெட்  பரிசு விழுந்துள்ளதா என்று பார்த்துள்ளார். ஆனால், அவரது லாட்டர் சீட்டிற்க்கு  பரிசுத்தொகை எதுவும் விழவில்லை என்று கூறவே, வீட்டுக்கு வந்த சாதிக்  அந்த 5 லாட்டரி டிக்கெட்டுகளையும் தனது வீட்டு குப்பை தொட்டியில் வீசி எறிந்துள்ளார்.மறுநாளில், அதேகடைக்கு மற்ற பொருட்கள் வாங்க அவர் சென்றுள்ளார். அப்போது, அந்த கடைக்காரர்  நேற்று நீங்கள் கொண்டு வந்த லாட்டரி சீட்டுக்கு இன்று பரிசு விழுந்துள்ளது என்று கடைக்காரர் கூற, அளவற்ற மகிழ்ச்சியடைந்த சாதிக், வீட்டுக்கு வந்து லாட்டரி டிக்கெட்டை தேடியுள்ளார்.இறுதியாக அவர் வீசிய குப்பைப் தொட்டியில் அந்த  5 லாட்டரி டிக்கெட்களும் இருந்ததை அவரின் மனைவி கண்டறிந்துள்ளார். இதனை அடுத்து, அந்த லாட்டரி  டிக்கெட்களை எடுத்துக்கொண்டு  கடைக்கு சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு லாட்டரி டிக்கெட்-க்கு ஒரு கோடி ரூபாயும், ஏனைய 4 டிக்கெட்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் பரிசாக கிடைத்துள்ளது. இந்த செய்தி அறிந்த அந்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துள்ள நிலையில், இப்போதே, சாதிக்  கார் ஒன்றை  முன்பதிவு செய்துள்ளார். மேலும், தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். குப்பைக்கு சென்ற காகிதம் ஒரு குடும்பத்தை கோபுரத்தில் கொண்டுபோய் வைத்துள்ளது கொல்கத்தா வாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube