பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு…! சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம் – அண்ணாமலை

எங்கள் மீது தொடர்ச்சியாக கை வைக்க வேண்டும் என்று விரும்பினால், நாங்களும் பதிலடி கொடுப்போம்.

கரூர் மாவட்டம், அரவகுறிச்சி தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அண்ணாமலை  அவர்கள், அராஜகம்  பண்ணினால், என்ன நடக்கும் என்று திமுகவிற்கு தெரியும். நாங்கள் அராஜகத்தில் ஈடுபடுவதில்லை. ஆனால், அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டால் நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம்.

நாங்கள் நேர்மையான வழியில் அரசியல் செய்பவர்கள். நங்கள் அகிம்சைவாதியாக தான் செயல்பட்டு வருகிறோம். எங்கள் மீது தொடர்ச்சியாக கை வைக்க வேண்டும் என்று விரும்பினால், நாங்களும் பதிலடி கொடுப்போம். அனைவர்க்கும் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.