தமிழகமெங்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், இதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது சுகாதாரத்துறை, இருப்பினும் காய்ச்சலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கோவையில் கடந்த சில நாட்களில் மட்டும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.