கோவை மாவட்டம், சூலூர் அடுத்த காங்கயம்பாளையம் ஏ.டி., காலனியில் சிலர் சட்டவிரோதமாக ,மதுவிற்பனை செய்வதால், அங்குள்ள குடிமகன்களால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதனையடுத்து 20க்கும் மேற்பட்டோர் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர், இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.