பழனிசாமியை முதல்வராக மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை – பிரேமலதா விஜயகாந்த்

அதிமுகவினரால் முதல்வராக்கப்பட்டவர் பழனிசாமி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளை செய்து வருகின்றது. தமிழகத்தில் அதிமுக, திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறன.

இதனிடையே 2017 பிப்ரவரி 14 முதல் 4 ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து இன்று விடுதலை செய்யப்பட்டார்.இந்நிலையில் தர்மபுரியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.அதிமுகவினரால் முதல்வராக்கப்பட்டவர். மேலும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்று பழனிசாமி கூறி வரும் நிலையில்,அதனை அவர்தான் விளக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.சசிகலா அரசியலுக்கு வரவேண்டும் எனவும் ஒரு பெண்ணாக சசிகலாவிற்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு.2016 தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டோம் அதே தொகுதிகளை எதிர்பார்க்கிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.