29 C
Chennai
Sunday, February 28, 2021

கர்ணன் பார்த்தேன்! வியந்து போனேன்..! – சந்தோஷ் நாராயணன்


8
/ 100


கர்ணன் பார்த்தேன். வியந்துபோனேன். தனுஷ், மாரி செல்வராஜ், வி கிரியேஷன்ஸ் மற்றும் அற்புதமான குழுவினர் அனைவரையும் நினைத்து பெருமை அடைகிறேன்.

தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். இப்படத்தில் யோகிபாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் முழு படத்தையும் பார்த்துள்ளார். இதனை அடுத்து இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கர்ணன் பார்த்தேன். வியந்துபோனேன். தனுஷ், மாரி செல்வராஜ், வி கிரியேஷன்ஸ் மற்றும் அற்புதமான குழுவினர் அனைவரையும் நினைத்து பெருமை அடைகிறேன். கர்ணன் அனைத்தும் கொடுப்பான்.’ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Latest news

Related news