இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்ள பாகிஸ்தான் அரசு அதிரடி முடிவு!

காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரததேசங்களாக பிரித்து மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த முடிவு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மக்களுக்காக பாகிஸ்தான் எந்த எல்லைக்கும் செல்லும் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால் எல்லையில் பதற்றம் அதிகமாக உள்ளது.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இஸலாமாபாத்தில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை பொது கூட்டத்தில், ‘ இந்திய தூதரை பாகிஸ்தானில் இருந்து திருப்பி அனுப்புவது. அதே போல இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரை நாடு திரும்ப சொல்வது.’ எனவும்

அடுத்ததாக, ‘ இந்தியா உடனான வர்த்தக ரீதியிலான உறவை முறித்துக்கொள்ளவது, ‘ தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.