பேசுவது குற்றம் என்ற புதிய சட்டம் புகுத்தப்படுகிறது! முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்!

  • பிரதமர் மோடியை ஒருமையில் பேசியதாக கூறி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
  • இது குறித்து கருத்து தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்  செய்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை ஒருமையில் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது நெல்லை கண்ணன் நீதிமன்ற காவலில் உள்ளர். இந்த சம்பவம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ‘ இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும் பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்?’ எனவும் பதிவிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.