பேரழிவை சந்திக்கும் இமாச்சல பிரதேசம்.! மத்திய அரசு நிதியுதவி வழங்க ப.சிதம்பரம் கோரிக்கை.!

பேரழிவை சந்தித்துள்ள இமாச்சல பிரதேசத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளார். 

இந்தியாவில் உள்ள பல்வேறு வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் என பல்வேறு பகுதிகளின் கனமழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹிமாச்சல் பிரதேஷ் பெரிதாக பாதிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக டெல்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேஷ், இமாச்சலப் பிரதேஷ், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
இது குறித்து  காங்கிரஸ் மூத்த தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் ட்ஜ்மாட்ஜி டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மற்றும் ஹரியானா மக்களுக்கும் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் குறிப்பாக இந்த கனமழையா அதிக சேதம் அடைந்துள்ள இமாச்சல் பிரதேசத்திற்கு பல உயிர்கள் பலியாகி உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதலால் மாநில அரசுக்கு குறிப்பாக நிதி வழங்க வேண்டிய இடத்தில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர்  பா.சிதம்பரம்

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.