அமெரிக்காவில் 65 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை! அச்சத்தில் அமெரிக்கா!

அமெரிக்காவில் 65 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை. அச்சத்தில்  அமெரிக்க மக்கள்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால், உலக அளவில் இதுவரை, 3,401,110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 239,604 பேர் உயிரிழந்துள்ளனர்.

 இந்நிலையில், இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். இந்த வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட  போதிலும், நாளுக்குநாள் இந்த வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் இந்த கொரோனா வைரஸால், இதுவரை 11,31,030 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் இந்த வைரஸ் தாக்கத்தால், 1897 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அங்கு பலி எண்ணிக்கை 65,753-ஆக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.