நெய்வேலியில் தேர்தெடுக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை.. ஓபிஎஸ் அறிக்கை…

நெய்வேலியில் தேர்தெடுக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை இது குறித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

நெய்வேலியில் இயங்கி வரும் நவரத்னா நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அண்மையில் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 299 பேர் அனைவருமே வெளிமாநிலத்தவர்கள். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில், ‘ ஆந்திர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களில் 75% அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது அந்தெந்த மாநிலத்தின் சட்டமாக இருக்கிறது.

அதேபோன்று தமிழகத்தில் சட்டம் இயற்றப்படும் என வாக்குறுதியை திமுக அளித்துள்ளது. அதனை நிறைவேற்றி தர வேண்டும். மேலும், நெய்வேலியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 299 பொறியாளர்களின் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இதுகுறித்து ஏன் இதுவரை குரல் எழுப்பவில்லை என்றும் அவர் விரிவான அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment