#Breaking : ஒத்த செருப்பு சைஸ்-7, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது – மத்திய அரசு அறிவிப்பு!

“ஒத்த செருப்பு” மற்றும் ஹவுஸ் ஓனர் திரைப்படங்களுக்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ்-7. இந்த திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி தயாரித்து இருந்தார். மேலும் அவர் மட்டுமே இப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ” ஹவுஸ் ஓனர் ” திரைப்படத்தை இயக்கினார்.இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் ஏற்கனவே அரகோணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மனி என மூன்று படங்களை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் பார்த்திபன் இயக்கி, நடித்த “ஒத்த செருப்பு சைஸ்-7”  , லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் ஆகிய தமிழ் திரைப்படத்திற்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.