#BREAKING: சென்னையில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை..!

சென்னை தியாகராய நகரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது. கொள்ளை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ராஜேந்திர பாபு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், க்ரில் கேட் பூட்டை உடைத்து 4 கிலோ தங்கம், வெள்ளிக் கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக உரிமையாளர்கள் 3 பேர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.