ஊதுபத்தி புகையால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீமைகள்…!!!

நம் அன்றாட வாழ்வில் ஊதுபத்தி ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஏனென்றால் நாம் கடவுளை தொழுதுகொள்ளும்  போது ஊதுபத்தியை பயன்படுத்துகிறோம். எனவே இது தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும், பயன்பாட்டை குறைக்க முடியும்.
சீன பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையை விட ஆபத்து நிறைந்தது என கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது நாள்பட்ட நுரையீரல் நோய், நுரையீரல் புற்று நோய், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் உருவாகக்கூடும். இதனை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் நுகரும் போது கருவில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஊதுபத்தி தவிர்க்க முடியாத பட்சத்தில் குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment