கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மட்டுமே தயாரிப்பு நிறுவனங்கள் கவனிக்கிறது – பயோடெக் நிர்வாக தலைவர்!

கொரோனா தடுப்பூசியை கண்டறியக் கூடிய தயாரிப்பு நிறுவனங்கள் மக்களின் பாதுகாப்பு மற்றும் தடுப்பூசியின் செயல் திறனை மட்டுமே கவனிப்பதாகவும் அதன் ஆயுள் காலம் குறித்து அறிவதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் தீவிரமாக பரவி வரும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சிரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஃபைசர் ஆகியவை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலுத்துவதற்கான அனுமதியை கோரி விண்ணப்பித்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து பேசிய பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் கிரண் மஜூம்தார்ஷா அவர்கள், கண்டறியப்பட்டுள்ள மருந்துகளை மதிப்பாய்வு செய்து அதற்கான ஒப்புதல் அளிப்பதற்கு ஒழுங்கான கால முறைகள் தேவை என  தெரிவித்துள்ளார். மேலும் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஃபைசர் ஆகிய நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து விட்டு அதற்கான அங்கீகாரம் கோரி நிற்கிறது. இந்த நிறுவனங்கள் தடுப்பூசியின் அவசர தேவை காரணமாக பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் தான் கவனம் செலுத்துவதாகவும் அந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட பின் எவ்வளவு நாட்கள் பாதிப்புகள் கொடுக்காமல் இருக்கும் என்பது குறித்தும், நீண்டகாலம் கழித்து ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்தும் ஆராய்வதில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய கொரோனா தொற்று நேரத்தில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய தடுப்பூசி செலுத்துவது நல்லது தான். பாதுகாப்பும் செயல்திறனும் மட்டும் கொண்ட தடுப்பூசி செலுத்திவிடலாம். ஆனால் தற்பொழுது கேள்வி என்னவென்றால் இது எவ்வளவு நாட்கள் வரை பாதுகாப்பு கொடுக்கும் என்பதுதான் எனக் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி அனுமதி அளிப்பது குறித்து கேட்கும்பொழுது அரசாங்கம் மறு ஆய்வு செய்ய சொல்லி அழுத்தம் கொடுப்பதில் தவறில்லை எனவும் பக்க விளைவுகள் குறித்து யோசிப்பதால் தான் அவர்கள் அவ்வாறு செய்வதாகவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal