ஓமைக்ரான் பரவல் – முதல்வர் இன்று ஆலோசனை..!

ஓமைக்ரான் தடுப்பு மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  ஆலோசனை.

இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் ஓமைக்ரான்  வைரஸ் பரவி வருகிறது. அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் 34 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓமைக்ரான் தடுப்பு மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 11:30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.