தளபதி 66 படத்தில் இணைந்த பிரபலங்கள்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. முன்பே படத்தில் பிரபல நடிகரான ஷாம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை தொடர்ந்து இந்த படத்தில் பல பிரபலங்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு,ஜெயசுதா கபூர் ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சரத்குமார் தளபதி 66 படத்தின் பூஜை நடைபெறும் போதே அதில் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.