வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? இந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து பாருங்கள்..!

பேசும் பொழுது சிலருக்கு வாய் துர்நாற்றமாக இருக்கும், இதிலிருந்து விடுபட இந்த தண்ணீர் போதும். 

நாம் பேசும்பொழுது நமக்கு வாய் துர்நாற்றமாக இருந்தால் அது நமக்கு தயக்கத்தையும், தன்னம்பிக்கையையும் குறைத்து விடும். யாரிடமும் தைரியமாக போய் பேச தோன்றாது. முதலில் இந்த வாய் துர்நாற்றம் நமக்கு இருப்பது நமக்கே தெரியாது என்பது தான் உண்மை. நமது அருகில் இருப்பவர்களுக்கே துர்நாற்றம் வீசுகிறது. அதனால் அவர்கள் முகம் சுழிப்பார்கள். அல்லது நம்மை விட்டு விலகி செல்வார்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள், அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இதனை கண்டு உங்களிடம் தெரிவித்தால் மட்டுமே அதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இது சரி செய்ய கூடிய பாதிப்பு தான். முதலில் இது எதனால் ஏற்படுகிறது என்றால், வாயில் புண், தொண்டைப்புண், தொண்டை சளி, வயிற்றுப்புண், செரிமான பாதிப்பு இதுபோன்று இருந்தால் வாய் துர்நாற்றம் வீசும். இதை சரி செய்ய எளிய குறிப்பு இப்போது நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதற்கு தேவையான பொருட்கள் நெல்லிக்காய் போடி, சீரகப்பொடி. இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை சம அளவு வாங்கி ஒரு மூடிய பாத்திரத்தில் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சேகரித்து வைத்து கொள்ளுங்கள். காலை எழுந்தவுடன் பல் துலக்கிய பிறகு, ஒரு டம்ளரில் பாதி அளவு தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள்.

அதில் அரை ஸ்பூன் இந்த நெல்லிக்காய் மற்றும் சீராக பொடியை சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரை உங்கள் வாயில் குறைந்தது 5 நிமிடம் வரை வைத்து கொள்ளலாம். அதன் பின்னர் கொப்பளித்து துப்பிவிடுங்கள். பிறகு, மீண்டும் அரை டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து அதனை நன்கு கலந்து குடித்து விடுங்கள். இதன் மூலமாக குடல் புண், தொண்டை புண் ஆகியவை சரியாகும். இதனை தொடர்ச்சியாக செய்து வாருங்கள், நீங்களே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். அதேபோல சுடுதண்ணீரில் கல் உப்பு போட்டு அடிக்கடி வாய் கொப்பளித்து வருவதும் துர்நாற்றம் நீங்க உதவும்.