இப்போதாவது திமுகவுக்கு அக்கறை வந்ததே -ராமதாஸ் ட்விட்

அண்ணா பல்கலைக்கழக நலனில் இப்போதாவது திமுகவுக்கு அக்கறை வந்துள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதை எதிர்த்தும் , துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யக்கோரியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில்,அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவை பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று திமுக போராட்டம் நடத்துகிறது. சுரப்பா நியமிக்கப்பட்டால் அண்ணா பல்கலைக்கழகம் சீரழியும் என்பதை உணர்ந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2018-லேயே போராட்டம் நடத்திய கட்சி பா.ம.க. அப்போது அதை வேடிக்கை பார்த்த திமுக, அண்ணா பல்கலைக்கழக சீரழிவுகள் தொடங்கி விட்ட நிலையில் இப்போது தான் போராட்டம் நடத்துகிறது. அண்ணா பல்கலைக்கழக நலனில் இப்போதாவது திமுகவுக்கு அக்கறை வந்ததே. அது வரை சரி தான் என்று தெரிவித்துள்ளார்.