விருது வாங்க வேண்டும் என்பதெல்லாம் எனது ஆசை இல்லை! சகுனி பட நடிகை அதிரடி!

நடிகை ப்ரனிதா சுபாஷ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் உதயன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது குறித்து பேசிய ப்ரனிதா, “படங்களில் தோன்ற வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம். மற்றபடி விருது வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை.”  எனக் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.