வடகிழக்கு பருவமழை பாதிப்பு – முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து மொத்த கணக்கெடுப்பு வந்தபிறகு ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்து நிதி கோருவோம் என்றும் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி மாவட்டம் செல்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்