ஜே.பி.நட்டா எப்படி பாஜக தலைவரானார் என யாருக்கும் தெரியாது.! காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் விமர்சனம்.!

நான் வாக்களிக்கும் முறைப்படி காங்கிரஸ் தலைவரானேன். ஆனால், பாஜகவின் தலைவராக ஜே.பி.நட்டா எப்படி நியமிக்கப்பட்டார் என இதுவரை யாருக்கும் தெரியாது – காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம்.

வரும் 12ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளததால் பிரதான கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி அங்கு பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

அதே போல காங்கிரஸ் கட்சியும் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு பிரச்சார பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜகவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அவர் கூறுகையில், ‘ காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை என பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், நான் நியாயமான ஜனநாயக முறைப்படி வாக்களிக்கும் முறைபடி தேர்ந்தெடுக்கப்பட்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.’ என குறிப்பிட்டார் கார்கே

மேலும், ‘ பாஜகவின் தலைவராக ஜே.பி.நட்டா எப்படி நியமிக்கப்பட்டார் என இதுவரை யாருக்கும் தெரியாது’ என காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்து இருந்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment