கல்லூரி சேர்க்கைக்கு புதிய சான்றிதழ் தேவையில்லை! புதுச்சேரி முதல்வர் அதிரடி!

கல்லூரியில் சேர புதிய சான்றிதழ் அவசியம் இல்லை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாகவே மூடப்பட்டுள்ள உள்ளது.

இந்நிலையில், தற்போது, கல்லூரியில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி அவர்கள், ‘ கல்லூரியில் சேர புதிய சான்றிதழ் அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், புதுவையில், ஆன்லைன் மூலம் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வருவாய் துறையில், புதிய சான்றிதழ் வாங்கி பதிவு செய்ய அவசியம் இல்லை என்றும், சாதி, குடியுரிமை, பழைய வருமான சான்றிதழ் இருந்தால் அதையே பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.