உக்ரைனுக்கு ஆதரவாக இராணுவ உதவிகளை தற்போது வரை செய்யவில்லை- நோட்டோ ..!

நோட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன என  நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்  தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டிக்கிறோம். ரஷ்யா உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை சீர்குலைத்துவிட்டது என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் நாட்டுக்குள் தங்களது படைகளை அனுப்பும் எந்த திட்டம் தற்பொழுது வரை இல்லை.

நோட்டோ படைகள் உக்ரைனுக்குள் செல்லவில்லை. நோட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன. ஆனால், நோட்டோ ஆயுத உதவி செய்யவில்லை. உக்ரைன் நோட்டோவில் இல்லை என்பதால் உக்ரைனுக்கு நோட்டோ  ஆதரவாக  இராணுவ உதவிகளை தற்போது வரை செய்யவில்லை . ஆனால் படைகள் நட்பு நாடுகளில் எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் படைகளுக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம்.

நேட்டோ தலைவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். உக்ரைனுக்கு நேரடியாக நேட்டோ படைகளை அனுப்ப முடியாது. ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

author avatar
murugan