Breaking:விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000 நேரடியாக வரவு வைக்கப்படும்!நிதியமைச்சர் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு எதிரொலியாக பொதுமக்களுக்கு உதவும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.

உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13  பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டினுள் இருந்து வருகின்றனர்.கொலைக்கார வைரஸால் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர்.  கொரோனா பாதிப்பு எதிரொலியாக பொதுமக்களுக்கு உதவும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.அதில் விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள், விதவைகளுக்கு நேரடியாக பண உதவி செய்யப்படும் என்று தெரிவித்துள்ள அவர் சுமார் 8.7 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha