பொது துறை வங்கிகள் 27இல் இருந்து 12ஆக குறைக்கப்பட உள்ளது! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!

மத்திய நிதியமைச்சர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கித்துறை பற்றிய பல அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் ஒன்றாக இணைக்கப்படும் எனவும், பஞ்சாப் நேஷனல் வங்கி – ஓரியண்டல் வங்கி –  யுனைட்டட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்க படும், எனவும், இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கியும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளன. அதேபோல, ஆந்திர வங்கி – யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி – கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட உள்ளன.

இதன் மூலம் இதுவரை இருந்த 27 பொதுத்துறை வங்கிகள் 12 ஆக குறைக்கப்பட்டு உள்ளன.  இதன் காரணமாக எந்தவித ஆட்குறைப்பும் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.