ஏப்ரல் 1 முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – NHAI அறிவிப்பு

சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அங்கு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

சென்னையில் வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரூ.10 மமுதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National Highways Authority of India) அறிவித்துள்ளது. இந்த சுங்க கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்