#INDvNZ: 8 விக்கெட்டை இழந்து தடுமாறும் நியூசிலாந்து..!

நியூசிலாந்து அணி 21 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 54 ரன் எடுத்துள்ளது. 

இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் சாதனை படைத்தார்.

இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம் லாதம், வில் யங் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 4 ஓவரில் வில் யங்  4 ரன் எடுத்து கோலியிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். பின்னர், அதே ஓவரில் கடைசி பந்தில் டாம் லாதம் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்சை கொடுத்து 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல் 8, ராஸ் டெய்லர் 1,  ஹென்றி நிக்கோல்ஸ் 7 மற்றும்  ரச்சின் ரவீந்திரா 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர் இதன்காரணமாக நியூசிலாந்து 17 ஓவரில் 6 விக்கெட்டை இழக்க, அடுத்து 20 ஓவரை அஸ்வின் வீச அந்த ஓவரில் டாம் ப்ளண்டெல் 8 ரன் எடுத்தும், டிம் சவுதி டக் அவுட் ஆனார்.

இதனால், நியூசிலாந்து அணி 21 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 54 ரன் எடுத்துள்ளது.  இந்திய அணியில் முகமது சிராஜ் , ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 3, அக்சர் படேல், ஜெயண்ட் யாதவ் தலா 1 விக்கெட்டை பறித்துள்ளனர். இந்திய அணி 269 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

author avatar
murugan