இந்திய அணியின் பந்துவீச்சில் அடிபணிந்த நியூசிலாந்து அணி ! 274 ரன்கள் இலக்கு

நியூசிலாந்து அணி 2-வது ஒருநாள் போட்டியில் 274  ரன்களை வெற்றி  இலக்காக இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று  ஆக்லாந்து நகரில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில் மற்றும் நிக்கோலஸ் களமிறங்கினார்கள்.இந்த ஜோடி நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.ஆனால் சிறப்பான தொடக்கத்தில் நிக்கோலஸ் 41 ரன்களில் வெளியேறினார்.இதனையடுத்து கப்தில் மற்றும் டாம் ஜோடி இணைந்தது.இந்த ஜோடி சற்று தாக்கு பிடித்தது.இதில் டாம் 22 ரன்களில் வெளியேறினார்.ஒரு கட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சில் நியூசிலாந்து அணி வீரர்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து கொண்டிருந்தனர் .இதன் பின்பு வந்த கேப்டன் டாம் லதாம் 7 ரன்கள்,ஜிம்மி நீசம் 3 ரன்கள்,கிராண்ட் ஹோம் 5 ரன்கள்,மார்க் 1 ரன்,சவுதி 3 ரன்கள் என சொற்ப ரன்களில் நடையை கட்டினார்கள்.  ஆனால் ராஸ் டெய்லர் மட்டும் களத்தில் தனி ஆளாக நின்று போராடினார்.அவருடன் ஜமிசன் ஜோடி சேர்ந்தார்.250 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி சுருண்டு விடும் என்று எதிர்பார்த்த நிலையில் டெய்லர் அரைசதத்துடன் அணியின் ரன் உயர்ந்தது.

இறுதியாக நியூசிலாந்து அணி 50  ஓவர்களில் 8  விக்கெட்டை இழந்து 273 ரன்கள் அடித்தது.களத்தில் ராஸ் டெய்லர் 73 * ரன்களுடனும்  ,ஜமிசன் 25 * ரன்ககளுடனும் இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் சாகல் 3 விக்கெட்டுகள்,தாகூர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.