புதிய வகை கொரோனாவா? பிரிட்டனிலிருந்து சென்னை திரும்பிய பயணிக்கு கொரோனா!

பிரிட்டனிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட சளி மாதிரி. 

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், இந்த கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுடன் பிரிட்டனுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பிரிட்டனிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்த நிலையில், அவருக்கு இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா இருக்கின்றதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அவருடைய சளி மாதிரி புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இதுகுறித்து கூறுகையில்,  ஆய்வின் முடிவு வந்த பின்னர்தான் அந்த நபருக்கு புதிய வகையான தொற்று இருக்கிறதா? என்பது குறித்து தெரியவரும். இந்த செய்தி குறித்து பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.