அதிரடி உத்தரவு: இனி அனைத்து கார்களில் “ஏர்பேக்” கட்டாயம்?

அதிரடி உத்தரவு: இனி அனைத்து கார்களில் “ஏர்பேக்” கட்டாயம்?

தற்போதைய காலத்தில் காரில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பட்ஜெட் கார்களை அதிகளவில் வாங்குகின்றனர். நாம் காரில் செல்லும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நமது உயிரை காப்பதில் அதிகம் பங்காற்றுவது , சீட்பெல்ட் மற்றும் ஏர்பேக் ஆகும்.

இந்த ஏர்பேக்கின் வேலை என்னவென்றால், நமது கார் விபத்தில் சிக்கும்போது அந்த ஏர்பேக்குகள் விரிந்து, காரில் பயணிக்கும் பயணிகளை மூடிக்கொள்வதால், பயணம் செய்பவர்கள் சிறிய காயங்களுடன் உயிர்பிழைக்க அதிகளவில் வாய்ப்புள்ளது. இந்த வகையான ஏர்பேக்குகள், ஹையர் வேரியண்ட் கார்கலில் அனைத்து இருக்கைகளுக்கு இருக்கும். ஆனால் பட்ஜெட் கார்களில் முன்புறத்தில் இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே இருக்கும்.

ஆயினும், சாதாரண ஹேட்ச்பேக் ரக வாகனங்களுக்கு ஒரு ஏர்பேக் கூட கொடுக்கவில்லை. இதனால் சிறிய கார்கள் விபத்தில் சிக்கும்போது உயிர்சேதங்கள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், அனைத்து கார்களுக்கும் ஏர்பேக்குகள் கட்டாயம் என மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் வாகனத் தரம் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைக்கு குழு, அனைத்து பயணிகளுக்கும் ஏர்பேக்குகள் வழங்கும் வசதியை அளிக்க கார் உற்பத்தி நிறுவனங்களை மத்திய . அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Join our channel google news Youtube